ஆன்மிகம்
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா 5-ந்தேதி தொடங்குகிறது
பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா வருகிற 5-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத்திருவிழா வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
5-ந் தேதி காலையில் தம்பையா ஓதுவாரின் திருமறை பாராயணம், காலை 6.30 மணிக்கு கொடியேற்றம், மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு போன்றவை நடக்கிறது. 6-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் வீதி உலா வருதல், காலை 8 மணிக்கு பூங்கோவில் வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு 9 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சாமியும் அம்பாளும் வீதி உலா வருதல் நடக்கிறது.
மேலும், 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை மாலை 5 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் சமய மாநாடும், தேவார பாடசாலை விழாவும். 8-ந் தேதி காலை 8 மணிக்கு பூதவாகனத்தில் சாமி வீதி உலா வருதலும், 9-ந் தேதி மாலை 5 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் சாமிக்கு அஷ்டாபிஷேகமும், இரவு 9 மணிக்கு வாகன பவனியும் நடைபெறும்.
11-ந் தேதி மாலை 4 மணிக்கு நடராஜ மூர்த்திக்கு திருச்சாந்து உற்சவமும், 5 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் உற்சவ மூர்த்திக்கு மண்டகப் படியும் நடக்கிறது. 12-ந் காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் அலங்கார மண்டபத்தில் நடராஜ பெருமானுக்கும், சிவகாமி அம்பாளுக்கும் அஷ்டாபிஷேகமும், இரவு 7 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதிஉலா வருதலும் நடக்கிறது.
13-ந் தேதி காலை 9.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். இதில் அம்மன் தேர், பிள்ளையார் தேர், இந்திரன் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. மாலை 6 மணிக்கு சாமி மண்டகப்படிக்கு வந்து பல்லக்கில் எழுந்தருளலும், இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா வருதலும், 11 மணிக்கு சப்தாவர்ண காட்சியும் நடக்கிறது.
10-ந் திருவிழாவான 14-ந் தேதி இரவு 8 மணிக்கு தெப்பத்திருவிழாவையொட்டி தெப்பத்தில் சாமி அம்பாள் பெருமாள் எழுந்தருளி, தெப்பக்குளத்தைச்சுற்றி 3 முறை வலம் வரும் நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்களும், பக்த சங்கத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.