ஆன்மிகம்
மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வர்தந்தி உற்சவ விழா இந்த ஆண்டு நடக்குமா?
மைசூரு சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்குவர்தந்தி உற்சவ விழா இந்த ஆண்டு நடக்குமா? என்ற கேள்விக்கு மந்திரி எஸ்.டி.சோமசேகர் பதில் அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கர்நாடகத்தில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டு கிடந்த கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் அனைத்தும், மாநில அரசின் உத்தரவின்பேரில் நேற்று திறக்கப்பட்டன. அதேபோல் மைசூரு மாவட்டம் சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் கர்நாடகத்தின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலும் நேற்று திறக்கப்பட்டது.
அதன்பேரில் நேற்று காலையில் கோவிலுக்கு மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரியும், மாநில கூட்டுறவு துறை மந்திரியுமான எஸ்.டி.சோமசேகர் வந்தார். அவர் கோவில் வளாகத்துக்குள் சென்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். அதையடுத்து கோவிலுக்கு வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் இந்த ஆண்டு சாமுண்டீஸ்வரி அம்மன் வர்தந்தி உற்சவ விழா நடக்குமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
இந்த மாதம் 21-ந் தேதி முதல் கன்னட ஆடி மாதமான ஆஷாட மாதம் தொடங்குகிறது. இந்த கன்னட ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறும். மேலும் அம்மன் வர்தந்தி(பிறந்தநாள் விழா) உற்சவமும் கொண்டாடப்படும்.
ஆனால் இந்த ஆண்டு ஆடி வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும்.
இக்கோவில் புனித தலம் ஆகியிருப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் வருவதற்கு சில நாட்கள் ஆகும். பக்தர்கள் சாமி தரிசனம் மட்டும் செய்யலாம். பூஜைகள் செய்ய அனுமதியில்லை. பக்தர்கள் கோவில் முன்வாசல் வழியாக கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வரவேண்டும்.
வருகிற 26-ந் தேதி முதல் ஆடி வெள்ளி ஆகும். இந்த ஆண்டு சாமுண்டீஸ்வரி அம்மன் வர்தந்தி உற்சவ விழா நடத்துவது தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் பேசி ஒப்புதல் பெறப்படும். கொரோனா பரவல் அதிகமாகிக் கொண்டே இருப்பதால் இப்போது எதையும் கூற முடியாது.
ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் என்றாலே மைசூரு மாவட்டம் விழாக்கோலம் பூண்டதுபோல் ஆகிவிடும். ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட 20 பேர் வரை வருவார்கள். மைசூரு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாமுண்டீஸ்வரி அம்மனினி சிலையை வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள். அன்னதானமும் நடக்கும்.
குறிப்பாக மைசூரு ஹெலிபேடில் இருந்து சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சிறப்பு பஸ்களை அரசு இயக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரொனா பிரச்சினையால் அதிகாரிகளின் கருத்துகளை கேட்ட பின்னர்தான் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.