வழிபாடு

நாகர்கோவிலில் அழகம்மன் கோவில் பவுர்ணமி தேர் கும்பாபிஷேக விழா

Published On 2022-08-29 04:25 GMT   |   Update On 2022-08-29 04:25 GMT
  • பவுர்ணமி தேர் வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.
  • தேர் கோவிலை வந்தடைந்ததும் தேர் கும்பாபிஷேகம் நடந்தது.

நாகர்கோவில் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவிலும் ஒன்று. இந்த கோவிலின் வடிவீஸ்வரம் அழகம்மன் சுந்தரேஸ்வரர் வழிபாட்டு அறக்கட்டளை சார்பில் நேற்று பவுர்ணமி தேர் கும்பாபிஷேக விழா நடந்தது.

இதையொட்டி நேற்று காலை கோவிலின் கிழக்கு வாயிலில் இருந்து பவுர்ணமி தேர் வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு வழிபாட்டு அறக்கட்டளை தலைவர் சரண்யா நாகராஜன், செயலாளர் சீனிவாச சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பவுர்ணமி தேர் வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியை வடம் பிடித்து இழுத்துதொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, பழவிளை காமராஜர் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரி தலைவர் மற்றும் செயலாளர் சுரேந்திரகுமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் கோபாலசுப்பிரமணியம், அக்‌ஷயா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாதஸ்வரம், சிங்காரி மேளம் முழங்க தேர் வீதி உலா நடந்தது. தேர் கோவிலை வந்தடைந்ததும் தேர் கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து மதியம் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் வடிவீஸ்வரம் அழகம்மனின் பெருமை குறித்த சமய சொற்பொழிவு நடந்தது. மாலை 6.30 மணிக்கு பவுர்ணமி தேர் கோவிலின் உட்பிரகாரத்தில் மும்முறை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7.30 மணிக்குப்பிறகு கோவில் கலையரங்கத்தில் இசை நிகழ்ச்சி நடந்தது.

Tags:    

Similar News