வழிபாடு

நாளை செவ்வாய்கிழமையில் வரும் பிரதோஷ வழிபாட்டின் சிறப்புக்கள்

Published On 2025-03-10 13:37 IST   |   Update On 2025-03-10 13:37:00 IST
  • செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருணவிமோசன பிரதோஷமாக கருதப்படுகிறது.
  • உலகை காப்பதற்காக ஆலகால விஷத்தை அருந்திய காலம் இந்த பிரதோஷ காலமாகும்.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் இரண்டு காலங்களிலும், திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும். அதிலும் செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷ விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது உடல் நோய்களை போக்குகின்ற அற்புதமான வழிபாடு ஆகும்.

இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்வது சிறப்பாகும். பிரதோஷ நேரம் மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ளதாகும். பிரதோஷ வேளையான இந்நேரத்தில் சிவபெருமானையும், நந்தி தேவரையும் தரிசிப்பது மிகவும் சிறப்பானது. நினைத்த காரியம் கைகூடும். வேண்டுதலும் நிறைவேறும் என்பது ஐதீகம்.



சிவனை தேவர்கள் மூவர்கள் வழிபடுவது ஒரு பிரதோஷ காலம் என்று அழைக்கப்படுகிறது. உலகை காப்பதற்காக ஆலகால விஷத்தை அருந்திய காலம் இந்த பிரதோஷ காலமாகும். நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் தங்கள் பிரார்த்தனைகளை ரகசியமாக சொல்வார்கள்.

அந்த வகையில் நாளை (செவ்வாய் கிழமை) பிரதோஷ வழிபாடு உடல் நோய்களை போக்குகின்ற அற்புதமான வழிபாடு ஆகும்.

செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருணவிமோசன பிரதோஷமாக கருதப்படுகிறது. பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் சிவாலயங்களில் சிவ வழிபாடு செய்வதால் எல்லா தோஷமும் நீங்கிவிடும். சர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாகும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு பிரதோஷ காலம் என்று அழைக்கப்படுகிறது. உலகை காப்பதற்காக ஆலகால விஷத்தை அருந்திய காலம் இந்த பிரதோஷ காலமாகும்.

செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், மேஷ, விருச்சிக ராசிக்காரர்கள், மிருகசீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திரகாரர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும்.

செவ்வாய் பிரதோஷம் மனிதனுக்கு வரும் ருனம் மற்றும் ரணத்தை நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு. இதனால் செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும் மேலும் பித்ரு தோஷமும் விலகும்.

இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். இயற்கையான வில்வ இலை அல்லது பசும்பாலினை அபிஷேகத்திற்கு கொடுப்பதால் சகல நன்மைகளும் கிடைக்கும். இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று புராண நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

ருணம் என்றால் கடன். கடன் பிரச்சனையால் இன்றைக்கு பலரும் தத்தளிக்கின்றனர். ரோகம் என்றால் நோய். கடனும் நோயும்தான் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. நோயினால் பலரும் கடனாளியாகின்றனர்.

நாளைய தினம் ருண விமோசன பிரதோஷ வேளையில் சிவபெருமானையும் நந்தியையும் வணங்கினால் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதோடு செவ்வாய் பகவானையும் வணங்கி வழிபட்டால் தீராத கடன்களும் தீரும் என்பது நம்பிக்கை. ரத்ததானம், அன்னதானம், பூஜைகளுக்காக மலர் தானம் போன்றவை செய்வது நல்லது.

அபிஷேகப்பிரியரான சிவனடியார்க்கு கறந்த பாலில் அபிசேகம் செய்வது சிறப்பு. தூய்மையான இளநீரில் அபிஷேகம் செய்வதும் நன்று. இயற்கையான வில்வ இலை, தும்பைப் பூ மாலை, கறந்த பால் ஆகியவற்றைக்கொண்டு பிரதோஷ நாளில் அபிஷேகம் செய்தால் சகலதோஷங்களும், பிரம்மஹத்தி தோஷமும், ஏழு ஜென்மங்களில் உண்டான தோஷமும் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

லட்சுமி நரசிம்மரைக் குறித்த ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும். செவ்வாயின் உக்ர ரூபத்தை கொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு பாணக நிவேதனம் செய்வித்தாலும் கடன் விரைவில் அடையும்.

ருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை பிரதோஷ காலத்தில் முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட்டால் தீராத கடன் தீரும். மேலும் கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெரும்பங்காற்றுகின்றனர்.

கடன் வாங்குவதற்கு நேரம் காலம் ரொம்ப முக்கியம். திருப்பி அடைப்பதற்கும் நேரம் ரொம்ப முக்கியம். ராகு கேது போன்ற பாம்பு கிரகங்களுடன் குரு சேர்ந்து நிற்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடன் அடைக்கவோ முயற்சி செய்ய கூடாது. ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்ய கூடாது. சந்திரபலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்க கூடாது. முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது. அதற்கு பதிலாக செவ்வாய்கிழமைகளில் கடன் அடைக்கலாம்.

சிவனுக்கு மட்டுமல்ல. ஸ்ரீ மகா விஷ்னுவிற்கும் பிரதோஷ நேரம் உகந்த காலம்தான். பிரகலாதனின் பக்தியை மெய்பிக்கவும் ஹிரண்ய கசிபுவை வதம் செய்து உலகை காக்கவும் தூணிலிருந்து நர நாராயண ரூபமாய் உக்ர நரசிம்ம மூர்த்தியாக வெளிவந்த காலம் இந்த பிரதோஷ காலம்தான். எப்படி ஈசனுக்கு சனிப் பிரதோஷம் மிகவும் மகிமை வாய்ந்ததோ அதே போல நரசிம்மருக்கு செவ்வாய் கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை.

செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். மனிதனுக்கு வரும் ருணம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது. செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும். பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும்.

எந்த ராசி, நட்சத்திரத்தை உடையவராக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைத்தீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்தத்தில் பிரதோஷ நேரத்திலே குளித்து விட்டு வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருணமும், நோய்களும் நீங்கும் என்பது சிவ வாக்கு.

உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும், வருமானம் அதிகரிக்கும். நாளைய பிரதோஷ தினத்தில் சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து பூஜித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ருண விமோசன பிரதோஷ நாளில் இருக்கும் மவுன விரதம் கூடுதல் பலன் தரும். இந்த நாளில் சிவபுராணம், நீலகண்டப் பதிகம், கோளறு பதிகம், திருக்கடவூர், திருப்பாசூர் பதிகங்கள் போன்றவற்றைப் பாராயணம் செய்வது நல்ல பலனைத் தரும்.

Tags:    

Similar News