அரக்கோணம் தக்கோலம் பேரூர் கங்காதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
- பழமை வாய்ந்த இக்கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்றது.
- நாளை காலை 6 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
அரக்கோணம் அருகே தக்கோலம் பேரூரில் பழம்பெருமை வாய்ந்த மோகனவல்லி சமேத கங்காதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழ்நாட்டில் உள்ள நந்தி தீர்த்த சிறப்புமிக்க ஒரே கோவில் என்ற பெயருடனும் வழிபாட்டு சிறப்புடனும் திகழ்ந்து வருகிறது. பழமை வாய்ந்த இக்கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்றது.
இதையடுத்து பல நூற்றாண்டுகளுக்கு பின் நாளை (திங்கட்கிழமை) காலை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை ஒட்டி கடந்த 18-ந்தேதி லட்சுமி ஹோமம் மற்றும் தனபூஜை நடைபெற்றது. 19-ந்தேதி நவக்கிரக ஹோமமும் 20-ந்தேதி யாகசாலை பிரவேசம், பூர்ணாஹுதி நடைபெற்றது. நாளை காலை 6 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள். இரவு 7. 30 மணிக்கு சாமி வீதி உலா நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.