இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 13 ஜனவரி 2025
- இன்று பவுர்ணமி. போகிப் பண்டிகை. ஆருத்ரா தரிசனம்.
- உத்திரகோசமங்கை மரகத நடராஜருக்கு 32 வகையான அபிஷேக காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-29 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பவுர்ணமி மறுநாள் விடியற்காலை 4.40 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்: திருவாதிரை காலை 11.23 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று பவுர்ணமி. போகிப் பண்டிகை. ஆருத்ரா தரிசனம். உத்திரகோசமங்கை மரகத நடராஜருக்கு 32 வகையான அபிஷேக காட்சி. சிதம்பரம் கனகசபை, மதுரை வெள்ளிசபை, திருவாலங்காடு, ரத்தினசபை, திருநெல்வேலி தாமிரசபை, திருக்குற்றாலம் சித்திரசபை ஆகிய ஐந்து சபைகளிலும் ஸ்ரீ நடராஜப் பெருமான் திருநடனக்காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் சோமவார அபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதருக்கு திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-நலம்
மிதுனம்-சிந்தனை
கடகம்-உழைப்பு
சிம்மம்-கவனம்
கன்னி-சாந்தம்
துலாம்- சுகம்
விருச்சிகம்-உறுதி
தனுசு- புகழ்
மகரம்-பணிவு
கும்பம்-பக்தி
மீனம்-பொறுமை