வழிபாடு
விரதம் இருப்பதற்கான நியதிகள்...
- விரதத்தை கடைப்பிடிக்க வேண்டிய முறை பல இருக்கின்றன.
- இருபத்திநான்கு மணி நேரமும் இறைச் சிந்தனையோடு இருக்க வேண்டும்.
நம் எண்ணங்கள் நிறைவேற, இறைவனை நினைத்து விரதம் இருக்கிறோம். விரதத்தை கடைப்பிடிக்க வேண்டிய முறை பல இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
* கோபப்படுதல் கூடாது.
* விரதத்திற்கு முதல்நாளே வீட்டை மெழுகிக் கோலம் போட வேண்டும்.
* பூஜை அறையைப் புனித அறையாக மாற்ற வேண்டும்.
* தெய்வப் படங்களை ஆனைமுகப் பெருமான் படத்திற்கு பக்கத்தில் வைத்து பூச்சூட வேண்டும்.
* ஐந்து முக விளக்கேற்றி வைத்து அந்த தெய்வத்திற்குரிய பாராயணங்களைப் படிக்க வேண்டும்.
* பெண்கள் வீட்டிற்கு விலக்கானால் எட்டுநாட்களுக்குப் பிறகே விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
* இருபத்திநான்கு மணி நேரமும் இறைச் சிந்தனையோடு இருக்க வேண்டும்.