வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நாளை தொடங்குகிறது

Published On 2022-11-16 13:35 IST   |   Update On 2022-11-16 13:35:00 IST
  • டிசம்பர் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை லட்சார்ச்சனை நடக்கிறது.
  • டிசம்பர் 13-ந்தேதி தேதி களபாபிஷேகம் நடைபெறும்.

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் சுவாமி கோவிலில் மண்டல பூஜை நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது அன்றைய தினம் 4 ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் மாலை அணிவதற்காக கோவிலுக்கு வருகை தருவார்கள். மண்டல விழாவை முன்னிட்டு அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் 12-ந்தேதி வரை ஆலயத்தின் தந்திரி பிரம்மஸ்ரீ சிவப்பிரசாத் நம்பூதிரி தலைமையில் லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் சனி தோச சாந்தி ஜெபமும் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 13-ந்தேதி தேதி ஐயப்பட களபாபிஷேகம் நடைபெறும். மண்டல விழாவை முன்னிட்டு அடுத்த மாதம் 17-ந் தேதி அகண்ட நாம பஜனையும் 18- தேதி ஞாயிற்றுக்கிழமை நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் பொதுமக்களும் பங்குபெறும் அன்னதானமும் நடைபெற உள்ளது.

27-ந்தேதி மகா கணபதி ஹோமமும் மண்டல விளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. மகர விளக்கு காலங்களில் மாலை அணிவதற்கும் இருமுடி கட்டி சபரிமலை பயணம் செல்வதற்காகவும் வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஐயப்பா சேவா சங்கம் செய்துள்ளது. ஜனவரி 14-ந்தேதி மகரஜோதியை முன்னிட்டு யானை வாத்தியத்துடன், காட்சி சீவேலியும் மாலையில் மகா தீபாராதனையும் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News