வடக்கு மாங்குடி ஹஜ்ரத் அஷ்ஷெய்க் சையது முகமது இனாயத்துல்லாவில் கந்தூரி விழா
- சந்தனம் பூசி தப்ரூக் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- விழாவில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
பாபநாசம் தாலுகா, வடக்கு மாங்குடியில் உள்ள ஹஜ்ரத் அஷ்ஷெய்க் சையது முகமது இனாயத்துல்லா கந்தூரி விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் அஷ்ஷெய்கு பதர் மலங்கு சாஹிபு வலியுல்லாவுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசி தப்ரூக் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
மேலும் தர்காவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட கொடி மற்றும் சந்தனக்குடம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசி பாத்திஹா ஓதி மீண்டும் தர்காவை வந்தடைந்தது. விழாவில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாங்குடி ஜமாத்தலைவர் அப்துல்நாசர் மற்றும் பசீர்அகமது, ராஜ்முகமது, செயலாளர் அப்துல்மாலிக், ஜமாத் ஆலோசகர் ஜபுருல்லா மற்றும் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், முனாபிக்கத்துல் அனாம் சங்கம், காயிதே மில்லத் படிப்பகம் ஆகியோர் செய்து இருந்தனர். பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.