வழிபாடு

வித்தியாசமான தட்சிணாமூர்த்திகள்

Published On 2022-10-20 08:33 GMT   |   Update On 2022-10-20 08:33 GMT
  • தட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர்.
  • தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குருவாம்.

* தஞ்சாவூருக்கு அருகில் உள்ளது தென்குடித் திட்டை பெரும்பாலும் அமர்ந்த கோலத்திலேயே காட்சி தரும் தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் நின்ற நிலையில் ராஜகுருவாக அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் மேலும் ஒரு சிறப்பு உண்டு. வேறு எந்த சிவத்தலத்திலும் காணப்படாத வகையில் இங்கே சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் 'குரு' தனிச்சந்நிதி கொண்டு காட்சி தருகிறார்.

* திருப்பூந்துருத்தி புஷ்பனேஸ்வரர் கோவிலில் வீணை ஏந்திய நிலையில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார்.

* எல்லா கோவில்களிலும், பொதுவாக இடது கால் மடித்த நிலையிலேயே தட்சிணாமூர்த்தி காட்சியளிப்பார். திருநெல்வேலி மாவட்டம் அம்பசாமுத்திரத்தில் வலது கால் மடித்து வித்தியாசமாகக் காட்சி தருகிறார்

* கம்பம் கம்பராயப் பெருமாள் கோவிலில் இடது கையில் கமண்டலத்துடன் யோக நிலையில் எழுந்தருளியுள்ளார். இது அபூர்வ காட்சியாகும்.

* தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் நடனத்திற்கு ஏற்றபடி மிருதங்கம் வாசிக்கும் நிலையில் தட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார்

* ராமநாதபுரம் திருவாடானை ஆதிரத்தினபுரீஸ்வரர் கோவில் ராஜ கோபுரத்தில் ஒன்பது நிலைகளிலும் குரு பகவான் ஒயிலாக காட்சியளிக்கிறார்.

Tags:    

Similar News