வழிபாடு

தை அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுக்க நல்ல நேரம்!

Published On 2025-01-27 08:53 IST   |   Update On 2025-01-27 08:53:00 IST
  • ஒவ்வொரு ஆண்டும் 3 முக்கிய அமாவாசைகள் வருகின்றன.
  • தர்ப்பணம்- படையல் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

தை அமாவாசை இந்த ஆண்டு ஜனவரி மாதமே வருகிறது. ஜனவரி 29-ந் தேதி, புதன் கிழமை அன்று தை அமாவாசை திதி வருகிறது.

திதி தொடங்கும் நேரம்: ஜனவரி 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 8.09.

திதி முடியும் நேரம்: ஜனவரி 29-ந் தேதி (புதன்கிழமை) இரவு 7.21 மணி.

ஜனவரி மாதம் 29- ந் தேதி அன்று காலை சூரியன் உதயமாகும் நேரத்தில் அமாவாசை திதி இருக்கிறது மற்றும் இரவு வரை நீடிக்கிறது என்பதால், ஜனவரி 29 அன்று தை அமாவாசைக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


தை அமாவாசை அன்று புண்ணிய நதிகளில் அல்லது நீர் நிலைகளில் நீராடி, பிண்டங்கள் வைத்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஆசிகளை பெறலாம்.

ஒவ்வொரு ஆண்டும் 3 முக்கிய அமாவாசைகள் வருகின்றன. தை அமாவாசை, ஆடி அமாவாசை , மகாளய அமாவாசை . இந்த 3 அமாவாசை நாட்களில் நம் முன்னோருக்கு தர்ப்பணம்- படையல் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

இதில் தை அமாவாசை மிகவும் விசேஷமானது. இந்த நாள் நாம் முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு திதி கொடுத்து வணங்க வேண்டிய முக்கிய நாளாகும்.

ஆடி அமாவாசை அன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை அமாவாசை அன்று விடை கொடுத்து அனுப்புகிறோம். இந்த நாட்களில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களது தாகத்தை தீர்க்க வேண்டும்.


இப்படி செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும் என்பது ஜதீகம். நமது முன்னோர்கள் காகத்தின் வடிவில் வீட்டு பக்கம் வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் அன்றைய தினம் காகத்துக்கு உணவு அளிப்பது மிகவும் முக்கியமாகும்.

இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று மென்மேலும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News