சந்திர கிரகணத்தையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை இன்று அடைப்பு
- சந்திர கிரகணம் இன்று நடக்கிறது.
- 7.30 மணிக்கு நடை திறந்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சந்திர கிரகணம் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.39 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6.19 மணி வரை நடக்கிறது. எனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று காலை 9.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் கோவிலில் பலகனி கதவுகள் அடைக்கப்பட்டு, நடையும் சாத்தப்பட்டு இருக்கும். மேலும் இன்று காலை 7 மணிக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.
பின்னர் 4.30 மணிக்கு மத்திம காலத்தில் தீர்த்தம் கொடுக்கப்படும். அதை தொடர்ந்து சந்திரசேகரர் சுவாமி புறப்பாடு நடந்து இரவு 7 மணிக்கு அர்த்தசாமபூஜை நடைபெறும். பின்னர் 7.30 மணிக்கு நடை திறந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த 22 உபகோவில்களில் இதே நேரத்தில் நடை அடைக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.