வழிபாடு

சாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

பழனி கோவில் கும்பாபிஷேகம்: குலுக்கல் முறையில் 2000 பேர் தேர்வு

Published On 2023-01-22 07:48 GMT   |   Update On 2023-01-22 07:48 GMT
  • யாகசாலை பூஜைகள் நாளை தொடங்குகிறது.
  • கும்பாபிஷேகம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இங்கு பக்தர்கள் அனுதிக்காக இந்துஅறநிலையத்துறை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 51295 பக்தர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

பழனி கோவில் அலுவலகத்தில் நேற்று குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது. அதில் 2000 பக்தர்கள் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்ய தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு உடனடியாக குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டன. குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் தகவலுடன் அடையாள அட்டையை காண்பித்து கோவில் அலுவலகத்தில் நாளைக்குள் கும்பாபிஷேக அனுமதி சீட்டை பெற்றுக்கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்தை யொட்டி பழனி கார்த்திகை மண்டபத்தில் யாகசாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு 90 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. கார்த்திகை மண்டபத்தில் நாளை(23-ந்தேதி) யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. இதையொட்டி அடிவாரம் பாதவிநாயகர் கோவில் முதல் பரிவார தெய்வங்கள் என அனைத்திற்கும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய தீர்த்தகுடங்கள் அலங்கரிக்கப்பட உள்ளன.

இவை மேளதாளங்களுடன் திருமுறை ஓதுதலோடு உலாவருகிறது. பின்னர் யாகசாலைக்கு செல்கிறது. அங்கு ஆதவன் வழிபாடு, மங்களஇசை, சூர்யகதிரிலிருந்து வேள்விக்கு நெருப்பு எடுத்தல் உள்பட பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதனைதொடர்ந்து முதல் கால யாகபூஜை தொடங்குகிறது. சிறப்பு பூஜை, விதை, தண்டு, இலை, காய்கனி, வாசனை திரவியங்கள், அறுசுவை சாதம், பால்,தயிர், சுண்டல், 12 விதமான மூலிகை குச்சிகளால் வேள்வி நடைபெறுகிறது.

பாதயாத்திரை பக்தர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். மலைக்கோவிலில் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News