வழிபாடு

பட்டினத்தார் பற்றிய தகவல்கள்

Published On 2023-05-12 14:01 IST   |   Update On 2023-05-12 14:01:00 IST
  • பட்டினத்தார் ஜீவசமாதி புதனின் அம்சம் கொண்ட கோவில்.
  • மற்ற தெய்வங்களிடம் நேர்த்திக்கடன் செய்வது போன்றவற்றை பட்டினத்தாரிடம் வேண்டக்கூடாது.

மகான் பட்டினத்தாருக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.

பல ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து, சிவனையே குழந்தையாக பெற்று வளர்த்தவர்.

கடைசியாக ஜீவசமாதி ஆவதற்கு முன் குழந்தைகளோடு விளையாடி விட்டு ஜீவசமாதி அடைந்தார்.

பட்டினத்தார் கோவிலுக்கு செல்லக்கூடிய குழந்தைகள் படிப்பு, ஒழுக்கம், கல்வி கலைகள் என்று அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள்.

பட்டினத்தார் ஜீவசமாதி புதனின் அம்சம் கொண்ட கோவில்.

இங்கு தொடர்ந்து செல்பவர்களுக்கு தொழிலில் மிகப்பெரிய வெற்றியும், வளர்ச்சியும் ஏற்படும்.

வீட்டில் லட்சுமி குபேர பூஜை செய்பவர்கள் குபேரர் படத்தோடு பட்டினத்தார் படத்தையும் வைத்து பூஜை செய்யும் போது பூஜை செய்த முழு பலனும் கிடைக்கும்.

மற்ற தெய்வங்களிடம் நேர்த்திக்கடன் செய்வது போன்றவற்றை பட்டினத்தாரிடம் வேண்டக்கூடாது.

சிவனுக்காகவே அனைத்து சொத்து, சுகங்களையும் விட்டு வாழ்ந்தவர்.

பட்டினத்தார் ஜீவசமாதி சென்னை திருவொற்றியூரில் உள்ளது.

Similar News