- வெந்நீர் ஊற்றுகளில் பக்தர்கள் நீராடிவிட்டு சிவன்கோவிலில் தரிசனம் செய்கின்றனர்.
- ஊற்றுகளில் குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம்.
மும்பை அருகே கணேஷ்புரியை அடுத்த அக்லோலியில் பிரசித்திபெற்ற சிவன்கோவில் உள்ளது. இந்த கோவில் ராமர் வனவாசம் இருந்த சமயத்தில் ராமர், சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோர் குளித்த இடம் என்கிறது வரலாறு. இதை உறுதிப்படுத்தும் வகையில் அங்கு 3 வெந்நீர் ஊற்றுகள் உள்ளன. ராமர் வனவாசம் இருந்தபோது அவருடன் இருந்த சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோருக்கு குளிர் காலத்தில் பயன்படுத்துவதற்காக வெந்நீர் தேவைப்பட்டது.
அதையடுத்து ராமர் எய்த அம்பு குத்தி நின்ற இடத்தில் வெந்நீர் ஊற்று தோன்றியதாக கருதப்படுகிறது. ஆனால் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பூமிக்கடியில் உள்ள பாறைக்குழம்பில் இருந்து வெளியாகும் நீரே வெந்நீராக மேலே கொப்பளிக்கின்றது என்கின்றனர். அங்கு ஊற்றெடுக்கும் வெந்நீரின் கொதிநிலை சராசரியாக 43 டிகிரி முதல் 49 டிகிரி ஆகும். இந்த வெந்நீர் ஊற்றுகளில் பக்தர்கள் நீராடிவிட்டு சிவன்கோவிலில் தரிசனம் செய்கின்றனர். ஊற்றுகளில் குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம்.