வழிபாடு
சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் வழியாக செல்ல அனுமதி
- 2022-ம் ஆண்டு ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- இந்த கோபுரம் வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோபுரம் வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து இந்த வழியாக சென்று அம்மனை தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், நேற்று பக்தர்கள் வரிசை மண்டபம் திறக்கப்பட்டது.
இந்த மண்டபம் வழியாக வரிசையில் வரும் பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக கோவிலுக்குள் சென்று அம்மனை வணங்கிய பின், மூலஸ்தான விநாயகரை வணங்கி அதைத்தொடர்ந்து உற்சவர் அம்மன் சன்னதி, கருப்பண்ணசாமியை வணங்கிய பிறகு ராஜகோபுரம் வழியாக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்த தகவலை கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக மகிழ்ச்சியுடன் சென்றனர்.