வழிபாடு
முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- விழா நாட்களில் தினமும் திருப்பலி நடைபெறுகிறது.
- இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் குழித்துறை மறை மாவட்ட பொருளாளர் அகஸ்டின், முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன், மாத்திரவிளை வட்டார முதல்வர் மரிய வின்சென்ட், நாஞ்சில் பால் இயக்குனர் ஜெரால்டு ஜெஸ்டின், பசலிக்கா அதிபர் டோமினிக் எம்.கடாட்சதாஸ், அருட்பணியாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது.
திருப்பலியில் தமிழ் மைய இயக்குனர் ஜெகத் கஸ்பர்ராஜ் மறையுரையாற்றினார். நிகழ்ச்சியில் முளகுமூடு பஞ்சாயத்து தலைவி ஜெனுஷா ஆர்.ஜோன் மற்றும் அருள் சகோதரிகள், அருட்பணியாளர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.