வழிபாடு

இன்று தர்ப்பை தினம்

Published On 2022-08-27 10:02 IST   |   Update On 2022-08-27 10:02:00 IST
  • தர்ப்பையை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
  • தர்ப்பைகளை சேகரித்து வைப்பதற்கு இன்று சிறந்த தினமாகும்.

பூஜைகளின் போது பயன்படுத்தும் தர்ப்பை மிக மிக சக்தி வாய்ந்தது. எவ்வளவு பெரிய கிரகணத்தையும் எதிர்கொள்ளும் ஆற்றல் தர்ப்பைக்கு மட்டுமே உண்டு. தர்ப்பையை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதற்குரிய சிறப்பை கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு தடவையும் பூஜை மற்றும் யாகம், தர்ப்பணம் போன்றவற்றுக்கு புதிய தர்ப்பைகளையே பயன்படுத்த வேண்டும். இப்படி பயன்படுத்த இயலாதவர்கள் இன்று (சனிக்கிழமை) தர்ப்பைகளை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளலாம். தர்ப்பைகளை சேகரித்து வைப்பதற்கு இன்று சிறந்த தினமாகும்.

ஆவணி அமாவாசையில் தர்ப்பைகளை சேகரித்து வைத்து ஒரு வருடம் வரை கூட பயன்படுத்தலாம். அதனால் எந்த தோஷமும் இல்லை என்று சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று காலை தர்ப்பைகளை சேகரிக்கும்போது, 'பிரம்ம தேவனுடன் ஒன்றாக சேர்ந்து தோன்றிய தர்ப்பமை எமது அனைத்து பாவங்களையும் போக்கி, மங்களத்தை செய்வாயாக' என்று சொல்லி சேகரிக்க வேண்டும். இப்படி சேகரிக்கப்படும் தர்ப்பைகளை ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் போது முழுமையான பலன்கள் கிடைக்கும்.

Tags:    

Similar News