வழிபாடு

இந்த வார விசேஷங்கள் (22-8-2023 முதல் 28-8-2023 வரை)

Published On 2023-08-22 04:07 GMT   |   Update On 2023-08-22 04:07 GMT
  • ஆகஸ்ட் மாதம் 22-ந்தேதியில் இருந்து 28-ந்தேதிவரை உள்ள முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்
  • வருகிற 25-ந்தேதி வரலட்சுமி விரதம்.

22-ந் தேதி (செவ்வாய்)

* சஷ்டி விரதம்.

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தருமிக்கு பொற்கிழி அருளுல்.

* திருநெல்வேலி குறுக்குத்துறை முருகப்பெருமான் புறப்பாடி கண்டருளல்

* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* சமநோக்கு நாள்.

23-ந் தேதி (புதன்)

* மதுரை சோமசுந்தரர் உலவாய்க்கோட்டை அருளிய திருவிளையாடல்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.

* கீழ்நோக்கு நாள்.

24-ந் தேதி (வியாழன்)

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.

* சமநோக்கு நாள்.

25-ந் தேதி (வெள்ளி)

* வரலட்சுமி விரதம்.

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வளையல் விற்ற திருவிளையாடல்.

* சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

* சமநோக்கு நாள்

26-ந்தேதி (சனி)

* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் மாலை தங்கச் சப்பரம்.

* கீழ்நோக்கு நாள்.

27-ந் தேதி (ஞாயிறு)

* சர்வ ஏகாதசி.

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் புட்டுக்கு மண் சுமந்த லீலை.

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளி கைக்கு எழுந்தருளல். கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

28-ந் தேதி (திங்கள்)

* பிரதோஷம்.

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் விறகு விற்ற திருவிளையாடல்.

* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.

* மேல்நோக்கு நாள்.

Tags:    

Similar News