வழிபாடு

உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளும் வாகனங்களில் அதிக எடை கொண்ட சர்வ பூபால வாகன சோதனை ஓட்டம்

Published On 2022-09-26 04:53 GMT   |   Update On 2022-09-26 04:53 GMT
  • திருப்பதி பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
  • சர்வ பூபால வாகனம் அதிக எடை கொண்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கடந்த 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழாவின்போது கோவிலின் நான்கு மாடவீதிகளில் வாகன சேவை நடத்தப்படவில்லை.

தற்போது இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழாவில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் வாகன சேவை நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவில் பயன்படுத்தப்படும் சர்வபூபால வாகனத்தின் எடை, உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று சர்வ பூபால வாகனத்தை சோதனை ஓட்டமாக அதிகாரிகள் வழிகாட்டுதல்படி கோவில் ஊழியர்கள் நான்கு மாட வீதிகளில் தோளில் சுமந்து சென்றனர்.

உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளும் வாகனங்களில் சர்வ பூபால வாகனம் அதிக எடை கொண்டது. அந்த வாகன சேவையின்போது ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்தனர்.

நிகழ்ச்சியில் கோவில் பேஷ்கார் ஸ்ரீஹரி, பார்பதீடர் உமாமகேஷ்வர்ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News