வழிபாடு
சூளைமேட்டில் வேணுகோபால் சாமி கோவில் கும்பாபிஷேகம்11-ந்தேதி நடக்கிறது
- இன்று முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது.
- நாளை 2-ம் மற்றும் 3-ம் கால யாக சாலை பூஜைகளும் நடக்கிறது.
சென்னை சூளைமேடு பஜனை கோவில் தெருவில் உள்ள ராதா சமேத வேணுகோபால் சாமி கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வருகிற 11-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இதையொட்டி இன்று(வெள்ளிக்கிழமை) கோபூஜை, கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜையும், நாளை(சனிக்கிழமை)2-ம் மற்றும் 3-ம் கால யாக சாலை பூஜைகளும் நடக்கிறது. நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு 4-ம் கால யாக பூஜையும், அதைத்தொடர்ந்து 7.30 மணிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.