உடற்பயிற்சி

புஷ் அப் செய்வது எப்படி? தினசரி செய்தால் கிடைக்கும் பலன்கள்...

Published On 2023-01-09 03:52 GMT   |   Update On 2023-01-09 03:52 GMT
  • புஷ்அப் ஒட்டுமொத்த உடலுக்கான உடற்பயிற்சியாகும்.
  • புஷ்அப்பை முறையான பயிற்சியாளர்களிடம் கற்றுக் கொள்வது நல்லது.

இந்த பயிற்சியை ஆண்களும், பெண்களும் என இருவருமே செய்யலாம். தொப்பையை குறைக்க உதவும். கைகளில் இருக்கும் தேவையற்ற சதையை கரைக்க உதவும்.

தரையில் பாதியளவில் படுத்தவாறு உங்கள் கைகளாலும் கால்களாலும் உடம்பை தாங்கிய நிலையில் இருங்கள். உங்கள் கைகளை தோள்களை விட சற்று அகலமாக வைத்திருங்கள்.

உங்கள் மார்பு கிட்டத்தட்ட தரையைத் தொடும் வரை உங்கள் உடலை கீழே இறக்கவும். பின் உங்களின் உடம்பை மேலே தள்ளுங்கள். இந்த பயிற்சியை முதலில் செய்ய சற்று சிரமமாக இருக்கலாம். அதனால் முதலில் உங்கள் வீட்டு சுவற்றில் கைகளை ஊன்றி நின்றவாறு செய்வது சுலபமாக இருக்கும்.

புஷ் அப் என்பது உங்க முழு உடலையும் தசைகளையும் ஈடுபடுத்தும் ஒரு எளிய பயிற்சி ஆகும். இந்த புஷ்அப் பயிற்ச்சி ஆனது நீங்கள் எந்த உபகரணும் இல்லாமல் செய்ய முடியும்.

புஷ்அப் என்பது ஒட்டுமொத்த உடலுக்கான உடற்பயிற்சியாகும். இது உங்கள் தசைகளை ஒரே நேரத்தில் செயல்படுத்த உதவுகிறது. இதயத் துடிப்பு அதிகரித்து உடலில் ஆக்ஸிஜன் அளவும் அதிகரிக்கிறது.

புஷ்அப் செய்வது உங்க மன அழுத்தத்தை மேம்படுத்த உதவுகிறது. கவனச்சிதறல் மற்றும் கவனம் செலுத்துவதில் சிக்கல் போன்றவற்றை சரிசெய்ய உதவுகிறது. குறைவான மன அழுத்தத்தில் இருக்கும் போது நம் கவனமும் மேலும் மேம்படுகிறது.

புஷ்அப் செய்வது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இது நாம் வயதாகும் போது பலனளிக்கக் கூடியது. நம் உடல்கள் காலப்போக்கில் தசைகளை மற்றும் ஆரோக்கியத்தை இழக்க தொடங்குகின்றன.

இது மருத்துவ ரீதியாக சார்கோபீனியா என்று அழைக்கப்படுகிறது. ஹார்வர்ட் ஹெல்த் படி, பெரும்பாலான ஆண்கள் தங்கள் வாழ்நாளில் தசை வளர்ச்சியில் 30 சதவீதத்தை இழப்பார்கள்.எனவே இந்த தசை வளர்ச்சியில் இழப்பு நம் வளர்ச்சிதை மாற்றத்தை குறைக்கிறது. நீங்கள் புஷ்அப் செய்யும் போது தசைகள் வலிமையாகி உங்க வளர்ச்சிதை மாற்றத்தை மேலும் அதிகரிக்கிறது.

புஷ்அப் செய்யும் போது உங்க கைகள், தோள்கள், மார்பு மற்றும் பின்புறம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் புஷ்அப் உங்களுக்கு வலிமையை அளிக்கிறது. இந்த புஷ்அப்களை முறையான பயிற்சியாளர்களிடம் இருந்து கற்றுக் கொள்வது நல்லது.

ஒவ்வொரு நாளும் புஷப் செய்வது உங்கள் மார்பு, ட்ரைசெப்ஸ், முன்புற தோள்கள் மற்றும் மையத்தின் வலிமையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

புஷ் அப் பயிற்சி உங்க தோரணையை சரி செய்யவும், தோள்பட்டை, இடுப்பை வலுப்படுத்தவும் பராமரிக்கவும் உதவுகிறது. புஷ்அப்களும் நல்ல தோரணையை மற்றும் உடல் அழகை மேம்படுத்துகின்றன என்று அனைத்து பயிற்சியாளரும் தெரிவிக்கின்றன

தினசரி புஷ் அப் பயிற்சி மணிகட்டை மற்றும் கைகள் உட்பட மேல் உடலை வலுப்படுத்துகிறது, இதனால் எலும்புகளை உடைக்காமல் அல்லது மோசமாக இல்லாமல் உங்கள் வீழ்ச்சியை உடைக்க முடியும். ஒவ்வொரு நாளும் புஷ் அப் செய்வது எலும்பு இழப்பைத் தடுக்கவும், உதவும். தினசரி புஷ் அப் பயிற்சி குறைந்த முதுகுவலியைப் போக்க உதவும் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது.

புஷ் அப்ஸ் போன்ற கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் விளைவாக உங்கள் இரத்த ஓட்டத்தில் வெளியாகும் எண்டோர்பின்கள் உடல் வலியை எளிதாக்குவதோடு மன அழுத்தத்தையும் குறைக்க உதவும்.

ஒவ்வொரு நாளும் முறையற்ற புஷ் அப் செய்வது குறைந்த அடி முதுகு வலியை ஏற்படுத்தும்.

புஷ்அப்கள் கீழ் முதுகை வலுப்படுத்தலாம், பல நபர்களுக்கு முதுகுவலியை போக்க உதவியாக இருக்கும். ஆனால் இதை நீங்கள் முறையான வழிகளில் செய்ய வேண்டும்.

முறையற்ற புஷ் அப் பயிற்சி உங்களுக்கு கீழ் முதுகு வலியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை அந்த மாதிரியான பிரச்சினை இருந்தால் உடனே உடற்பயிற்சியாளரை சந்திக்க வேண்டியது அவசியம்.

Tags:    

Similar News