தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையுமாம்!
- சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது.
- ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
சத்துகள் நிறைந்த பழமாக செவ்வாழைப்பழம் உள்ளது. தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிட்டும். அவை பற்றி...
தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையுமாம். மற்ற பழங்களை விட செவ்வாழையில் குறைவான கலோரி அளவு மற்றும் அதிகமான நார்ச்சத்து காணப்படுவதே காரணமாகும்.
செவ்வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். இதில் 75 சதவீதம் நீர் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளதால். சருமத்துக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்க உதவுகிறது.
அடிக்கடி செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால். சருமத்தில் ஏற்படும் வடுக்கள், துளைகள் சரியா கின்றன.
செவ்வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி 6. ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
ரத்தசோகை நோய் உள்ளவர்கள் தினமும் 2 அல்லது 3 செவ்வாழைப் பழம் சாப்பிட்டால் அவர் களின் சிவப்படாத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
செவ்வாழைப் பழத்தை தேங்காய், எள் அல்லது பாதாம் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடியில் பொடுகு நீங்குவதுடன், வறட்சியும் குறைகிறது.
செவ்வாழையின் சிறப்பு
மலச்சிக்கலைப் போக்குவதில் செவ்வாழைப் பழம் மிகவும் உதவியாக இருக்கிறது. நாள்பட்ட மலச்சிக்கல், மூலத்தை குணப்படுத்த உதவுகிறது. தினமும் மதிய வேளையில் செவ்வாழை சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும்.
புகை பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடவும் செவ்வாழைப் பழம் உதவுகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கும். உண்மையில், செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் நிகோடின் உட்கொள்வதை குறைக்க முடியும்.
புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட நபர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை குறைக்க இந்த பழத்தில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் உதவுகிறது.