பொது மருத்துவம்

அதிகளவு புரதம் நிறைந்த பழங்கள்

Published On 2025-02-10 15:11 IST   |   Update On 2025-02-10 15:11:00 IST
  • தசை ஆரோக்கியத்துக்கும் புரதம் அவசியம்.
  • என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

திசுக்களை உருவாக்குவதற்கும், சரிசெய்வதற்கும் மற்றும் தசை ஆரோக்கியத்துக்கும் புரதம் அவசியம். இது என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. பல்வேறு உடல் செயல்பாடுகளில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இது தோல், முடி மற்றும் நகங்களை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுவதோடு, நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பயன்படுகிறது. அதிக அளவு புரதங்கள் நிறைந்த பழங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம்...


அவகேடோ:

ஆரோக்கியமான கொழுப்புகளின் ஆதாரமாக அவகேடோ அறியப்படுகிறது. ஒரு கப் அவகேடோ 3 கிராம் அளவிலான புரதத்தை கொண்டுள்ளது. மேலும் நார்ச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் சி, ஈ, கே நிறைந்து காணப்படுகிறது.


கொய்யாப்பழம்:

வைட்டமின் சி நிறைந்த இந்தப் பழம், ஒரு கோப்பைக்கு 4 கிராம் அளவிலான புரதத்தை வழங்குகிறது.


கிவி:

இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது ஒரு கோப்பைக்கு 2 கிராம் அளவிலான புரதத்தை வழங்குகிறது.


மாதுளை:

வைட்டமின்கள் அதிகளவு நிறைந்து காணப்படும் மாதுளை, 100 கிராமுக்கு 1.7 கிராம் புரதத்தை வழங்குகிறது.


சர்க்கரை பாதாமி:

ஆப்ரிகாட்ஸ் என அறியப்படும் இந்தப் பழத்தில் வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது. 100 கிராம் அளவிலான இந்த பழம் 1.4 கிராம் புரதத்தை வழங்குகிறது.


கிரேப் புரூட்:

ஆரஞ்சு பழம் போன்று தோற்றமளிக்கும் இதில் வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்து உள்ளது. ஒரு கோப்பைக்கு 1.3 கிராம் புரதத்தை தருகிறது.


குழிப்பேரி:

பீச் என அழைக்கப்படும் இந்த பழத்தில் 1 கிராம் அளவிலான புரதம் காணப்படுகிறது.


வாழைப்பழம்:

இதில் ஒவ்வொரு கோப்பையிலும் 1.6 கிராம் அளவிலான புரதம் நிறைந்து காணப்படுகிறது. மேலும் வைட்டமின் ஏ, பி6, சி, மெக்னீசியம், நார்ச்சத்துகள் உள்ளன.


செர்ரி பழம்:

ஒரு கப் செர்ரி பழத்தில் 1.6 கிராம் அளவிலான புரதம் காணப்படுகிறது.


பலாப்பழம்:

இதில் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, ஏ நிறைந்துள்ளது. மேலும் ஒரு கோப்பைக்கு 3 கிராம் அளவிலான புரதம் உள்ளது.

Tags:    

Similar News