பொது மருத்துவம்
null

குளிர்காலத்தில் அதிகம் பரவும் `வாக்கிங் நிமோனியா'

Published On 2025-01-03 07:12 GMT   |   Update On 2025-01-03 08:57 GMT
  • வாக்கிங் நிமோனியா என்பது நுரையீரல் தொற்று ஆகும்.
  • மற்றொருவருக்கு தும்மல், இருமல் மூலம் வேகமாக பரவும்.

'வாக்கிங் நிமோனியா' என்பது தற்போது பரவலாக மனிதர்களை பாதிக்கிறது. வழக்கமாக நுரையீரலை பாதிக்கும் நிமோனியா தொற்றின் தீவிர அறிகுறிகள் இல்லாத இலகுவான வடிவமே இந்த 'வாக்கிங் நிமோனியா' ஆகும். இது நுரையீரல் தொற்று ஆகும்.

இது பொதுவாக 5 முதல் 15 வயதுடைய குழந்தைகள் மற்றும் 40 வயதுக்கு உட்பட்ட பெரியவர்களை தாக்குகிறது. இதன் அறிகுறிகள் பொதுவாக மிதமான அளவில்தான் இருக்கும். எக்ஸ்ரே ஆய்வில் நுரையீரலில் திட்டுக்கள் போன்று காண்பிக்கும்.


இது மைக்கோப்ளாஸ்மா நிமோனியா எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள இடங்களில் இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தும்மல், இருமல் மூலம் வேகமாக பரவும்.

பொதுவாக, நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு, பலவீனமான நோய் எதிர்ப்பு, புகைப்பழக்கம் உள்ளவர்களை இது அதிக அளவில் பாதிக்கிறது. நிமோனியா 10 நாட்கள் வரை தொற்று நோயாக இருக்கலாம்.


இந்த பாக்டீரியா உடலில் நுழைந்து மைக்கோபிளாஸ்மாவை வெளிப்படுத்திய 15-25 நாட்களுக்குப் பிறகு தொற்று பாதிப்பு அறிகுறிகள் வெளிப்படும். வாக்கிங் நிமோனியா பாதிப்பு ஒருவருக்கு இருந்தால் ஆழ்ந்த மூச்சு எடுக்கும்போது நெஞ்சு வலி, இருமல், காய்ச்சல் மற்றும் குளிர் போன்ற அறிகுறிகள், தொண்டை வலி, தலைவலி, சோர்வு, சிலருக்கு காது தொற்று, ரத்த சோகை அல்லது தோல் வெடிப்பு போன்றவையும் இருக்கலாம்.


குழந்தைகளை வாக்கிங் நிமோனியா பாதித்தால் உடல் சோர்வு, தலைவலி, காய்ச்சல், உலர் இருமல் காணப்படும். இதற்கு உரிய சிகிச்சை பெற வேண்டும் என்கிறார்கள், மருத்துவர்கள்.

Tags:    

Similar News