ஃபுட் பாய்சன் எதனால் ஏற்படுகிறது? அதனை எப்படி சரி செய்வது?
- சுகாதாரமற்ற உணவை சாப்பிடுவதால் அதிக அளவில் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது.
- ஃபுட் பாய்சனின் முதல் நிலை வயிற்றுவலி, வயிறு மந்தம் ஆகியவை.
உணவை உணவாக சாப்பிட்டாலும் சரி, மருந்தாக பயன்படுத்தினாலும் சரி, முதலில் நாம் கவனிக்க வேண்டிய்து அளவு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி.
தினசரி நாம் சாப்பிடும் சாதாரண உணவுகளை நாம் அளவோடு தான் சாப்பிட வேண்டும். சரி... அளவு என்பதை யார் நிர்ணயிப்பது?
ஒவ்வொரு நாளும் ஒரு சராசரி உடலுக்கு என்னென்ன சத்துக்கள் தேவைப்படுகின்றன என்பதையும், அந்த சத்துக்கள் எந்த அளவு தேவை என்பதையும் சராசரி கணக்கு மூலம் அறிவிக்கிறது.
உதாரணமாக இன்று காலை நாம் சாப்பிட்ட அளவும், மதியம் சாப்பிடுகிற அளவும் ஒன்றாக இருக்குமா, அதாவது இன்று காலை இரண்டு இட்லி சாப்பிட்டால், மறுநாள் காலையும் அதே அளவு தான் சாப்பிட வேண்டும்.
சரி சாப்பாடு போதும் என்பதை எப்படி தெரிந்துகொள்வது? புரிந்துகொள்ள பல வழிகள் இருக்கின்றன. ஒன்று பசி அடங்கிவிடுவது, இன்னொன்று சாப்பிடும் போது ருசியும் மறைந்து போகும். இந்த அடையாளங்கள் தோன்றினால் வயிறு நிறைந்துவிட்டது என்று அர்த்தம்.
நம் உடல் தன்னுடைய தேவையையும், செரிக்கும் தன்மையையும் பொறுத்துதான் நம்முடைய பசியையும், அதன் அளவையும் தீர்மானிக்கிறது. அந்த அளவைப் பின்பற்றினால் வயிறு கனமான உணர்வு ஏற்படாது. சாப்பிட்டபின் களைப்பு ஏற்படாது. முன்னிலும் சுறுசுறுப்பாக நம் வேலைகளைத் தொடர முடியும்.
ஃபுட் பாய்சன் ஏற்பட காரணம்:
நவீனயுகத்தில் எதையும் அவசரம் அவசரமாக விழுங்கிவிட்டு ஓடுவது, நேரமின்மையைக் காரணம் காட்டி, அன்று சமைத்ததை ஆறு நாட்களுக்குக்கூட பதப்படுத்தி வைத்து சாப்பிடுவது, இவை எல்லாமும் தான் ஃபுட் பாய்சன் ஏற்படக் காரணங்கள். ஃபுட் பாய்சனை நாம் சாதாரணமாக விட்டால் அது உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
சமைக்கும் காய்கறிகள் சரியாகக் கழுவப்படாமல் இருத்தல், சமைத்த உணவை முறையாகப் பதப்படுத்தாமல் இருத்தல், சாப்பிடும் தட்டை சரியாக கழுவாமல் இருத்தல் போன்ற காரணங்களால் ஃபுட் பாய்சன் ஏற்படும். குறிப்பாக, வெளியிடங்களில் சுகாதாரமற்ற உணவைச் சாப்பிடுவதால் அதிக அளவில் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
ஃபுட் பாய்சனின் முதல் நிலை வயிற்றுவலி, வயிறு மந்தம் ஆகியவை. அடுத்த நிலை, குமட்டல். அத்துடன், தலைவலி, ஜுரம் வருவது போல இருக்கும். கடைசி நிலை தீவிரமான வயிற்றுப்போக்கு, வாந்தி. வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும் உடனே நிறுத்தக்கூடாது.
படிப்படியாகத்தான் நிறுத்த வேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்கால், நமது உடலில் தேவையில்லாத உணவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகிறது; அது நல்ல விஷயம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு அதனை வெளியேற்றத்தான் இப்படி நடக்கிறது.
ஃபுட்பாய்சனை தடுக்கும் வழிமுறைகள்:
* சமைப்பவர், சாப்பிடுபவர் கை சுத்தமாக இருக்க வேண்டும். சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* சமைக்கப் பயன்படுத்தும், கத்தி, பலகை ஆகியவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பழங்கள், கீரைகள், காய்கறிகள் உபயோகிக்கும் முன் நன்கு கழுவிவிட்டுப் பயன்படுத்துங்கள்.
* ஃபிரிட்ஜில் வைத்த உணவை எடுத்துப் பயன்படுத்தும் போது, அதன் ஜில்லென்ற தன்மை முற்றிலும் தீரும்வரை வெளியில் வைக்க வேண்டும்.
* இரண்டு மூன்று நாட்களுக்குப் பயன்படுத்த விரும்புபவர்கள், தனித்தனி பாத்திரங்களில் உணவு பொருளை ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது.
* உணவில் துர்நாற்றம் அடித்தாலோ பூஞ்சை இருப்பது தெரிந்தாலோ அதை எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.
* செல்லப் பிராணிகளிடம் இருந்து உணவுப் பொருட்களை தள்ளியே வைத்திருங்கள்.