சமையல்

சுலபமாக செய்யலாம் தேங்காய் பிஸ்கட்...

Published On 2024-06-22 04:28 GMT   |   Update On 2024-06-22 04:28 GMT
  • பின் பாலிதின் பையில் போட்டு அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
  • சுவையான தேங்காய் பிஸ்கட் தயார்.

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 100 கிராம்

வெண்ணெய் - 80 கிராம்

சர்க்கரை - 40 கிராம்

வறுத்த தேங்காய் துருவல் - 25 கிராம்

வெனிலா சுகர் பவுடர் - அரை தேக்கரண்டி

பாதாம் பருப்பு தூள் - 15 கிராம்

உப்பு - சிட்டிகை

செய்முறை:

• முதலில் உருக்கிய வெண்ணெய்யுடன் பதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல், பாதாம் பருப்பு தூள் சேர்த்து கலக்கவும்.

• அதனுடன் சீனி, மைதா மாவு, வெனிலா சுகர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

• அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.

• பின் பாலிதின் பையில் போட்டு அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும்.

• அரை மணி நேரத்திற்கு பின் ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து சமதளத்தில் வைத்து சப்பாத்தி போல் வார்த்து, விரும்பிய அச்சுகள் கொண்டு வெட்டி, எண்ணெய் தடவிய மெலிதான ட்ரேயில் சிறிது இடைவெளி விட்டு வைக்கவும்.

• பின் 180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட மைக்ரோவேவ் அவனில் 15 நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும். சுவையான தேங்காய் பிஸ்கட் தயார்.

Similar News