சமையல்

உடல் ஆரோக்கியத்துக்கு கொள்ளு கேரட் துவையல்

Published On 2023-02-08 11:37 IST   |   Update On 2023-02-08 11:37:00 IST
  • தோசை, இட்லி, சப்பாத்திக்கு ருசியாக இருக்கும்.
  • உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல் மேனியின் அழகையும் பராமரிக்க உதவும்.

தேவையான பொருட்கள் :

கேரட் துருவல் - 1 கப்,

கொள்ளு - 30 கிராம்,

வெங்காயம் - 1

பூண்டு - 4 பல்,

காய்ந்த மிளகாய் -10,

உளுந்தம் பருப்பு - 1 கைப்பிடி,

கடலைப் பருப்பு - 1 கைப்பிடி,

கடுகு, கறிவேப்பிலை,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

வெங்காயத்தை அரிந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கேரட் துருவல், பூண்டை போட்டு வதக்கவும்.

பின்பு மிளகாய் வற்றல், கொள்ளு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றைத் தனியாக வறுக்கவும்.

அனைத்தும் சூடு ஆறியவுடன் வதக்கிய கலவையுடன் உப்பு, புளி தண்ணீர் சேர்த்து நைசாக மிக்சியில் அரைக்கவும்.

இத்துடன் வறுத்த பருப்புகள், மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து துவையலில் சேர்த்து கலக்கவும்.

சுவையான கொள்ளு கேரட் துவையல் ரெடி.

Tags:    

Similar News