- இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
- கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்
ராகி சேமியா - 100 கிராம்,
உருளைக்கிழங்கு - 3,
கேரட் - 1,
வெங்காயம் - 1,
கரம்மசாலாத்தூள், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள் - தேவைக்கு,
வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை - 4 டீஸ்பூன்,
சோம்பு - 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் - 50 கிராம்,
மைதா - 4 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிது.
செய்முறை
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் மைதா மாவு, தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து தண்ணீராகக் கரைத்துக் கொள்ளவும்.
ராகி சேமியாவை மிக்சியில் ரவை பதத்திற்குப் பொடித்துக் கொள்ளவும்.
மசித்த உருளைக்கிழங்குடன் துருவிய கேரட், வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், சோம்பு, பொடித்த வேர்க்கடலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டை அளவு எடுத்து விரும்பிய வடிவில் தட்டி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த கட்லெட்டுகளை மைதா கரைசலில் முக்கி, பொடித்த ராகி சேமியாயில் போட்டு பிரட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான ராகி சேமியா வெஜிடபிள் கட்லெட் ரெடி.