செய்திகள்
மருத்துவ படிப்பில் சேர மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 85 சதவீத மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் நீட் தேர்வு முடிவு தொடர்பாக துரைமுருகன் (தி.மு.க.) ஒரு பிரச்சனையை கிளப்பினார். அவர் கூறியதாவது:-
நீட் தேர்வு முடிவுகள் வந்து இருக்கிறது. இதில் தமிழக மாணவர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் இருண்டு போகும் வாய்ப்பு உள்ளது. எனவே இதற்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது.
தமிழக மாணவர்களை பாதிக்கும் இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு காணப்பட வேண்டும்.
அமைச்சர் விஜயபாஸ்கர்:- நீட் தேர்வு பற்றி மத்திய அரசு அறிவித்தவுடன் தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள முறைப்படி மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு செய்ய ஏதுவாக இரண்டு சட்டங்கள் இயற்றினோம். அதை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்து இருக்கிறோம். அது மத்திய அரசின் பரிசீலினையில் இருக்கிறது.
இந்த நிலையில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கவலையை கருத்தில் கொண்டு தமிழக முதல்-அமைச்சர், தலைமை செயலாளர், அட்வகேட் ஜெனரல் ஆகியோர் கலந்து பேசி ஒரு நல்ல முடிவை எடுத்து இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் ‘பிளஸ்2’ படித்த 4.2 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி இருக்கிறார்கள். சி.பி.எஸ்.இ. படித்த மாணவர்கள் 4675 பேர் நீட் தேர்வு எழுதி இருக்கிறார்கள்.
இவர்களுக்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும். சி.பி.எஸ்.இ படித்த மாணவர்களுக்கு 15 சதவீத இடமும், தமிழக அரசின் பாடத் திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடும் வழங்கி அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.
அகில இந்திய அளவில் 16-ந்தேதி கலந்தாய்வு நடக்கிறது. தமிழ்நாட்டில் 17-ந்தேதி கலந்தாய்வு தொடங்கும். அதில் உள் ஒதுக்கீடு அடிப்படையில் தமிழக கல்வித்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு பெரும்பான்மை இடம் கிடைக்கும்.
தங்கம் தென்னரசு (தி.மு.க.):- இந்த அரசாணை மூலம் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கான கலந்தாய்வு பிளஸ்-2 தேர்வு அடிப்படையில் நடைபெறுமா? அல்லது நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறுமா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
அமைச்சர் விஜயபாஸ்கர்:- சட்ட பாதுகாப்பு இருக்கும் வகையில் மிகுந்த கவனத்தோடு இந்த அரசாணையை அரசு பிறப்பித்து இருக்கிறது. நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். என்றாலும் தமிழக அரசின் கல்வி திட்டத்தின் கீழ் படித்த 85 சதவீத மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
பொன்முடி (தி.மு.க):- நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடந்தாலும் 85 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியுமா? இந்த கலந்தாய்வு அகில இந்திய அடிப்படையில் நடைபெறுமா? அல்லது தமிழக மாணவர்களுக்காக நடத்தப்படுமா? என்பதை விளக்க வேண்டும்.
அமைச்சர் விஜயபாஸ்கர்:- அகில இந்திய அளவில் 15 சதவீதம் ஒதுக்க வேண்டும். 16-ந்தேதி அதற்கான கலந்தாய்வு முடிந்து விடுகிறது. எனவே 17-ந்தேதி நாம் கலந்தாய்வு வைத்து இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 677 மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன. 17-ந்தேதி நடைபெறும் கலந்தாய்வில் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் தான் நடக்கிறது.
எனவே தமிழக அரசின் பாட திட்டத்தின் கீழ் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் பெரும் அளவில் பலன் பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.