வேலூர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவார்: கே.சி.வீரமணி
வேலூர்:
வேலூர் கோட்டை மைதானத்தில் வருகிற 9-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. விழா நடைபெறும் கோட்டை மைதானத்தை அமைச்சர் கே.சி.வீரமணி இன்று ஆய்வு செய்தார்.
கலெக்டர் ராமன், போலீஸ் சூப்பிரண்டு பகலவன், தாசில்தார் பாலாஜி, டி.எஸ்.பி. ஆரோக்கியம் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:- தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடி வருகிறோம். வேலூர் கோட்டை மைதானத்தில் 9-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். விழாவில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் வழங்குவார். விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.