செய்திகள்
புதிய மேம்பாலத்தை கவர்னர் கிரண்பேடி சைக்கிளில் சென்று பார்வையிட்ட காட்சி

புதிய மேம்பாலத்தை சைக்கிளில் சென்று பார்வையிட்ட கவர்னர் கிரண்பேடி

Published On 2017-08-19 11:40 IST   |   Update On 2017-08-19 11:40:00 IST
கவர்னர் அலுவலக அதிகாரிகள் மற்றும் மாணவர்களுடன் கவர்னர் கிரண்பேடி 100 அடி சாலையில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை சைக்கிளில் சென்றபடி இன்று காலை பார்வையிட்டார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி வார இறுதி நாட்களில் தூய்மை இந்தியா திட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகர பகுதிகளில் மாணவர்களுடன் சைக்கிளில் வலம் வருவது வழக்கம்.

அதன்படி இன்று காலை 20 மாணவர்கள் மற்றும் கவர்னர் அலுவலக அதிகாரிகள் ஆகியோருடன் ராஜ்நிவாசில் இருந்து கவர்னர் கிரண்பேடி சைக்கிளில் புறப்பட்டார். உப்பளம் அம்பேத்கார் சாலை, முதலியார்பேட்டை, மரப்பாலம், 100 அடி ரோடு, புதிய மேம்பாலம், இந்திராகாந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை, காமராஜர் சாலை வழியாக மீண்டும் கவர்னர் மாளிகையை அடைந்தார்.

100 அடி சாலையில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் சைக்கிளில் சென்றபடி கவர்னர் கிரண்பேடி பார்வையிட்டார். அப்போது புதிய பாலத்தில் ஒரு வழிபாதை மட்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மற்றொரு பாதையை எப்போது திறப்பீர்கள்? என்று அதிகாரிகளிடம் கேட்டார்.

மேலும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News