null
இரண்டு வருடங்களுக்கு பிறகு.. சற்றே உயர்ந்த ரூபாய் மதிப்பு - காரணம் இதுதான்
- இந்திய ரூபாய் மதிப்பு 87.92 ரூபாயாக இருந்தது.
- மதிப்பை உயர்த்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியும் நேற்று முயற்சித்தது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (பிப்ரவரி 11) சற்றே உயர்வை கண்டுள்ளது.
நேற்று (பிப்ரவரி 10) வாரத்தின் முதல் நாளில் 43 பைசா வீழ்ச்சி அடைந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 87.92 ரூபாயாக இருந்தது.
இந்திய ரூபாய் இதுவரை இவ்வளவு வீழ்ச்சியை சந்திதது கிடையாது. எனவே ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியும் நேற்று முயற்சித்தது.
சந்தை திறப்பதற்கு முன்பு, இந்திய ரிசர்வ் வங்கி, அரசு நடத்தும் வங்கிகள் வழியாக டாலர்களை விற்றது. சந்தை திறந்த பிறகும் இது நீடித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். சுமார் 2 முதல் 3 பில்லியன் டாலர்களை ரிசர்வ் வங்கி விற்பனை செய்தது.
எனவே இன்று (பிப்ரவரி 11) டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது. நேற்றைவிட விட 61 பைசாக்கள் குறைந்து இன்றைய ருபாய் மதிப்பு 86.63 ஆகி உயர்ந்துள்ளது. கடந்த 2 வருடத்தில் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. கடைசியாக நவம்பர் 2022 க்கு பிறகு ரூபாய் மதிப்பு 1 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.