வணிகம் & தங்கம் விலை

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!.. காரணம் இதுதான்

Published On 2025-02-10 11:00 IST   |   Update On 2025-02-10 11:00:00 IST
  • கடந்த வெள்ளிக்கிழமை சந்தை முடிவில் டாலரின் மதிப்பு 87.43 ரூபாயாக இருந்தது.
  • மந்தமான பொருளாதாரத்தை வலுப்படுத்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் ரெப்போ வட்டி விகிதங்கள் குறைப்பு.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (பிப்ரவரி 10) வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சந்தை முடிவில் டாலரின் மதிப்பு 87.43 ரூபாயாக இருந்த நிலையில் இன்று திங்கள்கிழமை சந்தை தொடக்கத்தில் 43 பைசா வீழ்ச்சி அடைந்து ரூபாய் மதிப்பு 87.92 ரூபாயாக உள்ளது. இந்திய ரூபாய் இதுவரை இவ்வளவு வீழ்ச்சியை சந்திதது கிடையாது.

நேற்று [பிப்ரவரி 9] அன்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 25% வரியை அறிவித்தார்.

இதன்காரணமாக ரூபாய் மதிப்பு சரிவைக் கண்டுள்ளது. னைத்து நாடுகளிலிருந்தும் உலோக இறக்குமதிகளுக்கு இந்த வரிகள் பொருந்தும் என்றும் இந்த வார இறுதியில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் என டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மந்தமான இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் ரெப்போ வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25% ஆக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.

Tags:    

Similar News