உள்ளூர் செய்திகள்

செல்போன்களை உரியவர்களிடம் எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே ஒப்படைத்தார்.

தேனி மாவட்டத்தில் திருடு போன 105 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

Published On 2023-04-27 12:39 IST   |   Update On 2023-04-27 12:39:00 IST
  • தேனி மாவட்டத்தில் பொதுமக்களிடம் திருடுபோனதாக கடந்த ஜனவரி மாதத்திலிருந்து 444 புகார்கள் பெறப்பட்டது.
  • ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 105 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தேனி:

தேனி மாவட்டத்தில் அனைத்து போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் பொதுமக்களிடம் இருந்து திருடுபோனதாக கடந்த ஜனவரி மாதத்திலிருந்து 444 புகார்கள் பெறப்பட்டது.

இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ்டோங்கரே உத்தரவின் பேரில் சைபர் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் திருடுபோன 140 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2ம் கட்டமாக ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 105 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News