3.11 லட்சம் பேரின் உயிரைக் காத்த 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள்
- அதி நவீன வானங்கள் என 1300- க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் இந்நாள் வரை 3 லட்சத்து 11 ஆயிரத்து 662 பேர் 108 ஆம்புலன்ஸை பயன்படுத்தி உள்ளனர்.
நாமக்கல்:
தமிழகத்தில் மருத்துவ ரீதியிலான அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை 2008 -ம் ஆண்டு செப்டம்பர் 15 -ல் 198 வாகனங்களுடன் பெருநகரங்களில் தொடங்கி தற்போது இச்சேவை விரிவுபடுத்தப்பட்டு தற்போது தமிழகத்தில் பச்சிளங்குழந்தை வாகனங்கள், இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள், அதி நவீன வானங்கள் என 1300- க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் 2 பச்சிளம் குழந்தை வாகனங்கள், 4 அதிநவீன வாகனங்கள் என மொத்தம் 29 வாகனங்கள் நாமக்கல் மாவட்டம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன.
3 லட்சம் பேர்
நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் இந்நாள் வரை 3 லட்சத்து 11 ஆயிரத்து 662 பேர் 108 ஆம்புலன்ஸை பயன்படுத்தி உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொடங்கப்பட்டு நாள் முதல் இன்று வரை பிரசவத்திற்கு மட்டும் 52287 பேரும், சாலை விபத்திற்கு மட்டும் 66,769 பேரும் இதர அவசர தேவைகளுக்கு 192,106 பேரும் என மொத்தத்தில் 3 லட்சத்து 11 ஆயிரத்து 662 பேரின் உயிர்களை காப்பாற்றி உயிர்காக்கும் தோழனாய் இன்று வரை வெற்றி நடை போட்டுக் கொண்டுள்ளது 108 ஆம்புலன்ஸ் சேவை.
2008 -ம் ஆண்டு முதல் அவசரம் என்றால் 108 ஆம்புலன்ஸை அழைக்கனும் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே 108 எவ்வாறு வந்தது என்பதை பற்றி பார்ப்போம்.
சூரியன், நிலா, பூமி
பூமத்திய ரேகையில் பூமியின் விட்டம் 7926 மைல்கள்.