உள்ளூர் செய்திகள்
180 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்
- சட்டவிரோதமாக அனுமதியின்றி மதுபானம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வெளிப்பாளையம் நல்லியான் தோட்டத்தில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மது பானம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 180 வெளி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் இது போன்ற கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் இதுகுறித்து புகார் தெரிவிப்பவர்கள் ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.