உள்ளூர் செய்திகள்

போரூரில் ரூ.28 லட்சம் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளுடன் 2 பேர் கைது

Published On 2025-02-06 12:31 IST   |   Update On 2025-02-06 12:52:00 IST
  • கைதான இருவரும் சீர்காழியை சேர்ந்த சதாம் என்பவரிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கி வந்ததா தெரிவித்து உள்ளனர்.
  • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போரூர்:

போரூர் அருகே குன்றத்தூர் சாலையில் உள்ள எம்.எஸ்.நகர் பகுதியில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுப்டனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் பெரிய பையுடன் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் ஏற்கனவே செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருந்தது. விசாரணையில் அவர்கள் அனகாபுத்தூரை சேர்ந்த ரஞ்சித்குமார்(34) மற்றும் பம்மலை சேர்ந்த அங்குராஜ் (37) என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்த மொத்தம் ரூ.28லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான இருவரும் சீர்காழியை சேர்ந்த சதாம் என்பவரிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கி வந்ததா தெரிவித்து உள்ளனர். இந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்தால் ரூ.1 லட்சத்திற்கு ரூ.4 ஆயிரம் வீதம் கமிஷன் தொகை கிடைக்கும் என்பதால் பணத்தை மாற்ற இருவரும் சென்னையில் தங்கி தொடர்ந்து முயற்சி செய்து வந்ததாக தெரிவித்து உள்ளனர்.

அவர்களுடன் தொடர்பில் உள்ள பழை ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News