செய்திகள்
இந்தியாவில் 2 கோடி குழந்தைகளுக்கு யோகா கற்றுத்தர திட்டம்: ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தகவல்
‘சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்தியாவில் 2 கோடி குழந்தைகளுக்கு யோகா கற்றுத்தர திட்டமிட்டு உள்ளோம்’ என்று ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் சென்னையில் கூறினார்.
சென்னை:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் வரும் 20 மற்றும் 21-ந்தேதிகளில் 2-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தலைமையில் ‘நிலையான வளர்ச்சிக்கு யோகா’ என்ற தலைப்பில் கருத்தரங்கு மற்றும் யோகா பயிற்சிகளும் நடக்கிறது.
சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இம்மாதம் முழுவதும் சென்னை மாநகர பொதுமக்களுக்கு இலவச யோகா பயிற்சி கற்பிக்கப்படுகிறது. இதனுடைய தொடக்க விழா ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ, மைதானத்தில் நேற்று நடந்தது. ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தலைமையில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. விழாவில் இந்திய மருத்துவ கழக துணைத்தலைவர் டாக்டர் பிரம்மானந்தம், பல்கலைக்கழக மானிய ஆணைக் குழு துணைத்தலைவர் பேராசிரியர் தேவராஜ், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
உடலை மேம்படுத்துவதற் கான தொழில்நுட்பம் தான் ‘யோகா’. இது என் கையிலோ, அமைப்புகள் கையிலோ இல்லாமல், தனிநபர் கைகளில் இருக்க வேண்டும். அது அவர் களுக்கு நன்மை பயக்கிறது. கடந்த 4 மாதங்களுக்கு, முன்பு 13 வயதுக்கு உட்பட்ட 1,700 குழந்தைகளும், 18 வயதுக்கு உட்பட்ட 9 ஆயிரம் குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டனர்.
வாழ்க்கையின் அடிப்படை தன்மையை சரியாக புரியாததால் இதுபோன்று நடந்துள்ளதாக தெரிகிறது. இதற்காக 8 மற்றும் 9 மாநில முதல்-மந்திரிகளை சந்தித்து, குழந்தைகளுக்கு சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா கற்று தருவது குறித்து பேசினேன். ஏழை மாணவர்கள் பயனடையும் வகையில், நாடு முழுவதும் 30 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 45 ஆயிரத்து 600 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதில் 2 சதவீதம் தனியார் பள்ளிகளாகும்.
தமிழகத்தை பொறுத்த வரையில் 6 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 10 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள். வரும் 3 அல்லது 4 மாதங்களில் நாடு முழுவதும் 2 கோடி குழந்தைகளுக்கு யோகா கற்றுத்தர திட்டமிட்டு உள்ளோம். யோகா கலாசாரம், நாடு மற்றும் மதம் சம்பந்தப்பட்டது இல்லை என்பதால் அனைத்து தரப்பினருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மனிதனின் உள்நன்மைக்கும், ஆரோக்கியத்திற்காகவும் இந்த பயிற்சியை பெறலாம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் ஐ.டி. ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. முறையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பதால் மத்திய அரசு இதனை சான்றிதழ் அளித்து முறைப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா ஐக்கிய நாடுகளில் 50 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சி வகுப்புகளை நடத்த தயாராகி வருகின்றனர்.
சென்னையில் 4 ஆயிரத்து 500 பேருக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மூலம், சென்னை மாநகரில் 3 லட்சம் பேருக்கு, மாநகராட்சி பள்ளிகள், பயிற்சி மையங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.