செய்திகள்

புதுவை வி.ஐ.பி.க்கள் வாகனங்களில் சைரன் ஒலி பயன்படுத்த தடை: கவர்னர் உத்தரவு

Published On 2016-06-06 09:22 IST   |   Update On 2016-06-06 09:22:00 IST
புதுச்சேரி மாநிலத்தில் வி.ஐ.பி.க்களின் வாகனங்களில் ‘சைரன்’ ஒலியை பயன்படுத்த கவர்னர் கிரண்பேடி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னரின் தனி செயலாளர் தேவநீதிதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் வி.ஐ.பி.க்களின் வாகனங்களில் ‘சைரன்’ ஒலியை பயன்படுத்த கவர்னர் கிரண்பேடி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

அவசரகால வாகனங்களான ஆம்புலன்சு, தீயணைப்பு உள்ளிட்ட வாகனங்களுக்கு இது பொருந்தாது. அதேபோல் வி.ஐ.பி.க்களின் வாகனங்களுக்கு போக்குவரத்தை நிறுத்தி செல்லும் வகையில் சிறப்பு சலுகைகளை காவல்துறையினர் வழங்கக்கூடாது.

மேலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் பகுதிகளில், கூடுதலாக போலீசாரை நிறுத்தி போக்குவரத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவு கவர்னர் பாதுகாப்பு ‘பைலட்’ வாகனங்களுக்கும் பொருந்தும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Similar News