செய்திகள்

திருவண்ணாமலையில் வீதி, வீதியாக வாக்காளர்களுக்கு எ.வ.வேலு நன்றி கூறினார்

Published On 2016-06-06 19:11 IST   |   Update On 2016-06-06 19:11:00 IST
திருவண்ணாமலை தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீதி, வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை நகரம் மண்டித் தெரு, சமுத்திரம் காலனி, பாவாஜி நகர், திருமஞ்சன கோபுர வீதி, கோரிமேட்டுத் தெரு, அப்துல் ரசாக் தெரு, அண்ணா நகர், தேனிமலை, பள்ளிகூடத் தெரு, கங்கையம்மன் கோயில் தெரு, எம்.கே.எஸ்.தியேட்டர் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, பார்வதி நகர், தாமரை நகர் வீட்டுவசதிவாரிய குடியிருப்பு, செங்கம் சாலை, அக்னி தீர்த்தம், செங்கம் ரோடு அரசு அலுவலர்கள் குடியிருப்பு, ஏரிக்கரை ஆகிய பகுதிகளில் இரவு 9.30 மணி வரை வீதி, வீதியாக சென்று வாக்காளர்களுக்கு, முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தொகுதி, சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு அவர்கள் நன்றி தெரிவித்து பேசினார். அப்போது பொதுமக்கள் மேள, தாளம் முழங்க சால்வைகள் அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் எ.வ.வேலுவுக்கு வரவேற்பு கொடுத்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Similar News