செய்திகள்
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் தாமதம் ஏன்? மத்திய அரசு விளக்கம்
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவது ஏன் என்று பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. குழுத் தலைவர் டாக்டர் பி.வேணுகோபால், சென்னை மெட்ரோ ரெயில் திட்டங்கள் திட்டமிட்டப்படி செயல்படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதா? இந்த திட்டங்களை முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்று கேள்விகள் கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித்சிங் எழுத்து பூர்வமாக அளித்துள்ள பதில் வருமாறு:-
தமிழகக்தில் ரூ.3,770 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் வண்ணாரப்பேட்டை - விம்கோநகர் வரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை விரிவுப்படுத்தும் பணியும் அடங்கும்.
சென்னை மெட்ரோ ரெயில் முதலாம் கட்ட திட்டத்துக்கு 2013-16 வரையிலான நிதியாண்டில் ரூ.4,903.13 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்க அனுமதி அளித்தது. அதில் நடப்பு நிதியாண்டில் ரூ.959 கோடி உள்பட மொத்தம் ரூ.4,772 கோடி வழங்கப்பட்டுள்ளது.
முதலாம் கட்ட திட்டத்தை 2017-ம் ஆண்டு டிசம்பரில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்திட்டம் 87 சதவீத அளவுக்கு நிறைவேறி உள்ளது.
மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டம் (வண்ணாரப்பேட்டை -விம்கோநகர்) 2018 மார்ச் மாதம் நிறைவு பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் வரையிலான முதலாம் கட்ட திட்டம், சென்ட்ரல்- பரங்கிமலை வரையிலான 2-ம் கட்ட திட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதமே முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் தாமதமான அத்திட்டங்களை வரும் டிசம்பர் மாதம் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பல்வேறு ரெயில் நிலைய தடயங்களை அமைக்க இடம் கிடைக்காதது, செயல்திறன் குறைபாடான சில ஒப்பந்ததாரர்கள் போன்ற காரணங்களால் இரு திட்டங்களும் நிர்ணயித்த காலத்தில் நிறைவேற வாய்ப்பு இல்லை. இதை கருத்தில் கொண்டு சில பகுதிகளில் மறு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் இத்திட்டங்களை விரைவுபடுத்த பணிகள் முடுக்கி விடப்படும் என்று ராவ் இந்தர்ஜித் சிங் கூறியுள்ளார்.