செய்திகள்

இலுப்பூர் மதர்தெரசா பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம்

Published On 2016-07-23 20:44 IST   |   Update On 2016-07-23 20:44:00 IST
இலுப்பூர் மதர்தெரசா பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் ரத்ததான முகாம் கல்லூரியில் நடைபெற்றது.

விராலிமலை:

இந்த ரத்ததான முகாமிற்கு கல்வி நிறுவனங்களின் நிறுவனர் இரா.சின்னதம்பி தலைமை தாங்கினார். கல்லூரியின் தாளாளர் உதயக்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் தினேஷ்குமார் முகாமிற்கு வந்த அனைவரையும் வரவேற்றார்.

முகாமில் புதுக்கோட்டை ரத்த வங்கி தலைமை மருத்துவர் டாக்டர்.சலீம் அப்துல்குத்தூஸ் வாழ்த்துரை வழங்கினார். அதன் பின்னர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தை சேர்ந்த 100 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். முகாமில் துறைதலைவர்களான ராதாகிருஷ்ணன், சுதாபிரியா, கோவிந்தராஜ், ராகவேந்திரன், முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாம் நிறைவில் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் வினோத் அய்யப்பன் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை விராலிமலை வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்மணி, சுகாதார மேற்பார்வையாளர் சங்கரன், ஆய்வாளர்களான செல்வராஜ், கண்ணன், குமரேசன் மற்றும் முகமது யூசுப் ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News