செய்திகள்

மணமேல்குடி அருகே மீனவர் வலையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்

Published On 2016-07-26 01:10 IST   |   Update On 2016-07-26 01:10:00 IST
மணமேல்குடி அருகே மீனவர் வலையில் சிக்கிய மோட்டார் சைக்கிளை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மணமேல்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை அடுத்த கிருஷ்ணாஜி பட்டினத்தை சேர்ந்த மீனவர்களான ராஜாமுகமது, சுல்தான் ஆகியோர் நேற்று முன்தினம் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். அவர்கள் வீசிய வலையில் கனமான ஒரு பொருள் சிக்கியதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து ராஜாமுகமது கடலுக்குள் குதித்து வலையை சோதித்த போது அதில் ஒரு மோட்டார் சைக்கிள் சிக்கியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து படகில் விரைந்து சென்று வலைக்குள் சிக்கிய மோட்டார் சைக்கிளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சிவப்பு கலர் மோட்டார் சைக்கிளான அதில் பதிவு எண் எதுவும் எழுதப்படவில்லை. எனவே அதன் என்ஜின் எண்ணை வைத்து உரிமையாளரை கண்டறியும் விசாரணை தொடங்கியுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள் தீவிரவாதிகள் யாரும் பயன்படுத்தியதா? அல்லது ஏதாவது கொலை வழக்கில் தடயத்தை மறைப்பதற்காக கடலில் போடப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News