செய்திகள்

த.மா.கா. மூத்த துணைத்தலைவர் ஞானசேகரன் நீக்கம்: ஜி.கே.வாசன் அறிவிப்பு

Published On 2016-07-26 08:44 IST   |   Update On 2016-07-26 08:44:00 IST
த.மா.கா. மூத்த துணைத்தலைவர் ஞானசேகரன் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர், த.மா.கா.வில் இருந்து அடுத்தடுத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விலகி வருகின்றனர். த.மா.கா. துணைத்தலைவர் ஞானசேகரன் கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க.வில் சேரப்போவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த சூழ்நிலையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் ஞானசேகரன், வேலூர் மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாச காந்தி ஆகியோர் அவர்கள் வகித்த இயக்க பொறுப்பில் இருந்து இன்று முதல் (நேற்று) விடுவிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே த.மா.கா. மூத்த துணைத்தலைவராக இருந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்து, தற்போது எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News