செய்திகள்

செங்குன்றம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Published On 2016-08-28 17:14 IST   |   Update On 2016-08-28 17:14:00 IST
செங்குன்றம் அருகே கட்சி கொடி நட்டிய போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
மாதவரம்:

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில் மண்டபத்தில் ஒரு அரசியல் கட்சி பிரமுகரின் மகன் திருமணம் நாளை (29-ந்தேதி) நடக்கிறது.

அதையொட்டி இன்று மாலை திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. எனவே, நேற்று இரவு செங்குன்றத்தில் இருந்து பாடியநல்லூர் வரை கட்சி கொடி மற்றும் தோரணங்கள் கட்டும் பணி நடைபெற்றது.

அதில், மேற்கு சைதாப்பேட்டை நியூ காலனியை சேர்ந்த சுதாகரன் (27) என்பவர் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவு 3 மணி அளவில் கட்சி கொடி கட்டப்பட்ட இரும்பு கம்பியை நட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது மேலே சென்ற மின்சார வயரில் இரும்பு கம்பி உரசியது. இதனால் அதில் மின்சாரம் பாய்ந்து சுதாகரணை தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Similar News