செய்திகள்

திண்டுக்கல் அருகே மணலூர் பஞ்சாயத்து வாக்காளர் பட்டியலில் குளறுபடி

Published On 2016-10-03 16:18 IST   |   Update On 2016-10-03 16:18:00 IST
1-வது வார்டு முதல் 9-வது வார்டு வரை வாக்காளர்கள் பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன. இதனால் வாக்காளர்கள் எந்த வார்டில் யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாமல் குளறுபடியில் உள்ளனர்.

பெரும்பாறை:

திண்டுக்கல் அருகே மணலூர் பஞ்சாயத்தில் 9-வார்டுகள் உள்ளன. வார்டுகளில் குடியிருக்கும் நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு வேறு வார்டுகளில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. குடி இருக்கும் வார்டுகளில் பெயர்கள் இல்லாமல் தகப்பன் ஒரு வார்டு, தாய் ஒரு வார்டு, மகன் ஒரு வார்டு, மனைவி ஒரு வார்டாக தனித்தனி வார்டுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.

அதாவது 1-வது வார்டு முதல் 9-வது வார்டு வரை வாக்காளர்கள் பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன. இதனால் வாக்காளர்கள் எந்த வார்டில் யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாமல் குளறுபடியில் உள்ளனர்.

அதோடு வார்டு உறுப்பினர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்யும் உறுப்பினர்கள் எந்த வார்டில் மனுதாக்கல் செய்வது? யாரை முன்மொழிய வைப்பது என்று தெரியாமல் அவதிபடுகின்றனர்.

எனவே இதுகுறித்து தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுத்து அந்தந்த வார்டுகளில் வாக்காளர்கள் பெயர்களை சேர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News