செய்திகள்

கரூர் அருகே தோட்டத்தில் பயங்கர தீ விபத்து

Published On 2017-02-19 23:04 IST   |   Update On 2017-02-19 23:04:00 IST
கரூர் அருகே தோட்டத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் வந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

வேலாயுதம் பாளையம்:

கரூர் மாவட்டம், தளவா பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 35). இவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. அதில் தென்னைமரங்கள் மற்றும் முள்வேலி மரங்கள் மற்றும் பல்வேறு வகையான மரங்கள் இருந்தன.

அதில் திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து தினேஷ் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு, தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் நிலைய அலுவலர் கோமதி தலை மையில் சுந்தர், ஜெர்மையா, சீரங்கன், கலைச்செல்வன், நடராஜன், ராதா கிருஷ்ணன், கார்த்திகேயன், செல்வம், பொன்னர் ஆகியோர் கொண்ட குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தென்னை மற்றும் முள்வேலி மற்றும் பல்வேறு வகையான மரங்களில் வேகமாக எரிந்து கொண்டு இருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தி தீ அருகிலிருந்த வீடுகளுக்கும், தோட்டங்களுக்கும் பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

அதேபோல் மூலிமங்கலம் அருகே ஊராட்சி பகுதியில் உள்ள குப்பைகளை சேகரித்து அங்குள்ள குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். குப்பை கிடங்கில் குப்பைகள் மலை மலைபோல் குவிந்திருந்தது.

இந்நிலையில் குப்பையில் திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த இளங்கோ வேலாயுதம் பாளையம் தீயணைப்பு துறையினருக்கு, தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் நிலைய அலுவலர் கோமதி தலைமையில் சுந்தர், ஜெர் மையா, சீரங்கன், கலைச் செல்வன், நடராஜன், ராதாகிருஷ்ணன், கார்த்திகேயன், செல்வம், பொன்னர் ஆகியோர் கொண்ட குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குப்பை குவியல்களில் வேகமாக எரிந்து கொண்டு இருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தி தீ அருகிலிருந்த வீடுகளுக்கும், தோட்டங்களுக்கும் பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

Similar News