செய்திகள்

டெல்லியில் இன்று மாலை மத்திய மந்திரி ஜெட்லியுடன் 3 தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

Published On 2017-05-31 13:15 IST   |   Update On 2017-05-31 13:15:00 IST
டெல்லியில் இன்று மாலை 4 மணிக்கு 3 தமிழக அமைச்சர்கள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து பேசுகிறார்கள்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் 3 தமிழக அமைச்சர்கள் இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து பேசுகிறார்கள்.

இதற்காக அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் டெல்லி சென்று விட்டனர். 4 மணிக்கு அவர்கள் நிதிமந்திரியை சந்திக்க இருக்கிறார்கள்.


வறட்சி நிவாரணம் தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிகிறது. மேலும் ஜனாதிபதி தேர்தல் குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்படுகிறது. பல்வேறு வி‌ஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News