செய்திகள்
திருப்பாச்சேத்தி அருகே மைனர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: லாரி டிரைவர் கைது
மைனர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை:
திருப்பாச்சேத்தி அருகே உள்ள கொத்தன்குளத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் மானாமதுரை அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த லாரி டிரைவர் வெங்கடேசன் (வயது30) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குறிப்பிட்டு உள்ளார்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமிர்தம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அதன் அடிப்படையில் லாரி டிரைவர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.